கோர விபத்தில் 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!

104

குருநாகல் – நாரம்மல, வாரியபொல வீதியில் சியம்பலாகஸ்கொட்டுவ, மதீனா தேசிய பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழிந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று(05.07.2026) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், பாடசாலைக்கு அருகில் வைத்து முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

 

இதன்போது, படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 19 வயதுடைய இளைஞர், உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.