தங்கம் வாங்க காத்திருப்போருக்கு சாதகமான செய்தி : இன்று பதிவாகியுள்ள திடீர் மாற்றம்!!

125

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (07.07.2026) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (06.07.2026) 24 கரட் தங்க பவுண் ஒன்று 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று அதன் விலை 3,000 ரூபாயால் குறைந்து 379,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதன்படி, 24 கரட் தங்க பவுண் ஒன்று 379,000 ரூபாவாகவும், 22 கரட் தங்க பவுண் ஒன்று 348,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,588 ரூபாயாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.