இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்ச ரூபா பெறுமதியான கஞ்சா தமிழகத்தில் பிடிபட்டது!!

582

ganja

இலங்கைக்கு கடத்தும் நோக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டம் வழியாக ஒரு காரில் ஏராளமான கஞ்சா கடத்தப்படுவதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, நடத்தப்பட்ட தீவிர வாகன சோதனையில் ஒரு காரில் கடத்தப்பட்ட சுமார் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த பொலிசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

அந்த கஞ்சாவை மதுரையை சேர்ந்த ஒரு வியாபாரியிடமிருந்து வாங்கியதாகவும், இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டு சென்றதாகவும் பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த கடத்தல் தொடர்பாக மேலும் நாலு பேரை தேடிவரும் போலீசார், பிடிபட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார் 50 லட்சம் என்று தெரிவித்துள்ளனர்.