முகநூல் ஊடாக யுவதிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த இளைஞர் கைது!!

952

Facebook

முகநூல் ஊடாக பள்ளி மாணவிகள் உட்பட்ட இளம் யுவதிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்த 22 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதிகள் தம்மை சந்திக்க மறுத்தால் அவர்களின் நிர்வாணப் படங்களை முகநூலில் பிரசுரிப்பதாக கூறி குறித்த இளைஞர் அச்சுறுத்தி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த மாணவி ஒருவர் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்திருந்த போது அவருக்கு அச்சுறுத்தல் செய்தி விடுக்கப்பட்ட போதே குறித்த இளைஞர் தொடர்பில் தகவல் வெளியானது.

குறித்த மாணவி குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு தெரிவித்த முறைப்பாட்டை அடுத்து பாணந்துறை பிரதேசத்தில் வைத்து இளைஞர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த இளைஞர் 17 வயதாக இருக்கும் போது அவரது தந்தை அவருக்கு கையடக்க தொலைபேசியை பெற்றுக் கொடுத்ததாகவும் பின்னர் காணியை விற்று லெப்டொப்பை பெற்றுக் கொடுத்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.