எட்டு பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு உயர் நீதிமன்றம்!!

23

1997ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொலைக்குற்றம் சாட்டிய 08 பிரதிவாதிகளுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 7 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பிரதிவாதிகள் இன்று (08) நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், மற்றொரு பிரதிவாதி இல்லாமல் விசாரணையை நடத்த நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

1997 ஆம் ஆண்டு கொழும்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் பலரை காயப்படுத்தியதற்காக, பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இதற்கமைய, அரச தரப்பால் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீண்ட விசாரணைக்கு பின்னர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.