அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்க வேண்டாம் : தீவிரமடையும் மற்றுமொரு நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை!!

45

புதிய இணைப்பு : சமூகத்தில் தோல் நோய்களின் பரவல் தீவிரமாக அதிகரித்து வருவதாக தோல் நோய்கள் குறித்து அதிக விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தோலில் மாற்றங்கள் , அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி உரிய வைத்திய ஆலோசனையைப் பெறுமாறும் வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனர்.

முதலாம் இணைப்பு : நாட்டில் தோல் நோய்கள் தற்போது தீவிரமான சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளதாக தோல் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தோல் நோய்களுக்கான சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தோல் நோய் வைத்தியர் நயானி மதரசிங்க தெரிவித்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே வேகமாக பரவிவரும் தோல் நோய்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்ட புதிய டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 2,000-ஐ எட்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு டெங்கு தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.