இலங்கை வரலாற்றில் பாரியளவில் உயர்ந்த இலவங்கப்பட்டை விலை!!

160

இலங்கை வரலாற்றிலேயே இலவங்கப்பட்டை விலை கடந்த மே மாதம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலவங்கப்பட்டை மேம்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ இலவங்கப்பட்டை தற்போது ரூ. 5,000 முதல் 5,500 வரை விற்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது. அதன்படி, அல்பா தர இலவங்கப்பட்டை ஒரு கிலோ கிராமுக்கு ரூ.7,000 ஐ எட்டியுள்ளது.

அதிகரித்த தேவையும், ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட ஏற்ற இறக்கமும் இலவங்கப்பட்டை விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளன.

இந்த ஆண்டு இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்ட நாடு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்த சாதனை விலைகள் எட்டப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் நாயகம் ஜனக லிண்டர கூறியுள்ளார்.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலவங்கப்பட்டை ஏற்றுமதி வருவாய் ரூ. 27 மில்லியன் அதிகரித்து இத்துறையில் வளர்ச்சியை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.