யாழில் பெண்ணொருவருக்கு நடந்த விபரீதம்!!

629

Hair

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், அப்பெண்ணின் முடியினை வெட்டிவிட்டுச் சென்ற வினோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு தொண்டைமானாறு, ஊறணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பெண்ணின் கணவர் வெளிநாட்டிலுள்ள நிலையில், மூன்று பிள்ளைகளுடன் அப்பெண் தனித்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு குறித்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் சிலர், அவரை பலவந்தமாக மடக்கிப் பிடித்து கூந்தலை கத்தரித்து விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில், பெண்ணின் 13 வயது மகளுக்கு வெட்டுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக குறித்த பெண் வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.