இலங்கையில் நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

151

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (13.07.2026) மீண்டும் சரிவு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.