7 வருடங்களாக கோமாவில் கணவர் : காலை கடித்து குணப்படுத்திய மனைவி!!

39

கணவனோ, மனைவியோ அல்லது வேறு உறவோ!.. உறவுகளில் ஒருவர் பல வருடங்கள் நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களை பராமரிப்பது என்பது கடினமான ஒன்று.

இந்நிலையில்தான் 7 வருடங்களாக கோமாவில் இருந்த தனது கணவரை அவரின் மனைவி தனது அன்பால் இயல்பு நிலைக்கு கொண்டு வந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

அந்தப் பெண்ணின் பெயர் சாங் மெய். ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரின் கணவர் கீழே விழுந்ததில் அவரின் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்று விட்டார்.

கடந்த 7 வருடங்களாக தனது கணவரை வீட்டிலேயே வைத்து அவருக்கான பணிவிடைகளை சாங் மெய் செய்து வந்தார். தினமும் கணவருடன் பேசுவது, கை கால்களை அசைத்து விடுவது, அவரின் கால் நரம்புகளை தூண்ட காலை பல்லால் மெதுவாக கடிப்பது என பல முயற்சிகளை செய்து வந்திருக்கிறார்.

அவரின் 7 வருட முயற்சியின் வீண்போகவில்லை. தற்போது அவரின் கணவர் கோமாவில் இருந்து மீண்டு சுயநினைவை பெற்றிருக்கிறார். சுயநினைவு வந்ததும் மனைவியை பார்த்து அவர் சொன்ன முதல் வார்த்தை ‘ஐ லவ் யூ’, இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.