வட்ஸ்அப் குறுஞ்செய்திகள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

28

சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்துமாறு அறிவுறுத்தும் மோசடி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் குறித்து இலங்கை பொலிஸ் திணைக்களம் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடமிருந்து (DMT) வந்ததாகத் தோன்றும் அந்தச் செய்திகள், கூறப்படும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றன.

இருப்பினும், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பிற்கு பொறுப்பாளரான டிஐஜி டபிள்யூ.பி.ஜே. செனடீரா, டிஎம்டி அத்தகைய எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்றும், அந்தச் செய்திகள் முற்றிலும் போலியானவை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த குறுஞ்செய்தி இணைப்புகளைத் திறக்கவோ, தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை வழங்கவோ, அல்லது அந்தச் செய்திகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட எவரும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.