டுபாயிலிருந்து பல கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை தந்திரமான முறையில் கடத்த முயற்சித்தவர் கைது!!

634

Gold

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை தந்திரமான முறையில் விமான நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்ல முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 தங்க துண்டுகள் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை 1.45 வந்திறங்கிய இலங்கையர்கள், தங்கத்தை வரி சலுகை விற்பனை நிலையத்தின் ஊழியரிடம் கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.

அந்த ஊழியர் தங்கத்தை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் இடத்திற்கு சென்றிருந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் கூறினார்.

கடத்தி வரப்பட்ட தங்கத்தை வரிச் சலுகை விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவர், தனது முழங்காலில் தங்கத்தை கட்டி மறைத்து விமான நிலையத்திற்கு வெளியில் எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.