
இலங்கை அணியின் சின்தன விதானகே, க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் எடையைத் தூக்கத் தவறியதால் இலங்கையின் பதக்க கனவு பறிபோனது.
69 கிலோகிராம் பாரப் பிரிவில் போட்டியிட்ட 33 வயதான சின்தன விதானகே, ஸ்னச் முறையிலான பளுதூக்கலில் முதலாவது முயற்சியில் 122 கிலோ கிராமையும், இரண்டாவது முயற்சியில் 126 கிலோ கிராமையும் தூக்கினார்.
ஆனால் மூன்றாவது முயற்சியில் 140 கிலோகிராம் எடையை அவரால் தூக்க முடியாமல் போனது. தொடர்ந்து க்ளீன் அண்ட் ஜேர்க் முறையிலான பளுதூக்கலில் 160 கிலோகிராம் எடையைத் தூக்குவதற்கு முயற்சித்த மூன்று சந்தர்ப்பங்களிலும் சின்தன விதானகே கோட்டைவிட்டார்.
இதுபற்றி அவர் கூறுகையில், இந்தப் போட்டியில் வெற்றிபெறும் நோக்குடனேயே பங்குபெற்றதாகவும், சொந்த மண்ணில் 170 கிலோ கிராம் எடையைத் தூக்கியபோதிலும் இங்கு தன்னால் சாதிக்க முடியாமல் போனதையிட்டு கவலை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.





