7 வயதில் உயிருக்கு போராடும் மகன் : நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரியின் கடைசி ஆசை!!

28

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழிந்த அதிகாரியொருவரின் கடைசி ஆசை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் ஒட்டுமொத்த இலங்கையையும் பதைபதைக்க வைக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைய, நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 21 கைதிகளும் 8 பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், சிறைச்சாலையில் இருந்து 40 ஆயிரம் கைதிகள் வேறு வேறு இடங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, அம்பலந்தோட்டாவின் பாலகஹகொடெல்லா பகுதியில் வசித்து வந்த 39 வயதான சிறைக்காவலர் சந்திக லஷன் குணவர்தன, சம்பவம் நடந்து ஒரு வாரக் காலப்போராட்டத்திற்கு பின்னர் நேற்று(13.07.2026) இரவு உயிரிழந்துள்ளார்.

குறித்த அதிகாரிக்கு 7 வயதில் மகன் ஒருவர் இருப்பதாகவும், அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்ற பெரும் பணம் தேவை என்பதால் உயிரிழந்த அதிகாரி சந்திக மகனின் உயிரைக் காப்பாற்ற தொடர்ந்து பணம் தேடிக் கொண்டிருந்ததாக சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சந்திக, தனது இறுதி மூச்சை விடும்போதும் சிறுவனின் நினைவுகளில் இருந்தார் என்றும்,

தனது கடமைக்காக உயிரைத் தியாகம் செய்த ஒரு மாவீரனின் கடைசி விருப்பம், அவரின் குழந்தையைக் காப்பாற்றுவதே என்றும் கூறப்படுகிறது. அத்துடன், சிறைச்சாலை மோதல் சம்பவத்தில், 100க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகளும் கைதிகளும் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.