வவுனியா கற்பகபுரம் நேற்று பெய்த காற்றுடன் கூடிய மழையால் கடுமையாக பாதிப்பு!!

611

நேற்று (23.09) வவுனியாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடும் காற்றுடன் மழை பெய்தமை அறிந்த விடயம். இந்த அனர்த்தத்தில் தொலைத்தொடர்பு கோபுரம் உட்பட மரங்கள் முறிந்து விழுந்ததும் என பல அனர்த்தங்களுக்கு மத்தியில் வவுனியா கற்பகபுரம் கிராமமும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது .
இரவு சுமார் 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் வீடுகள் கடுமையாக பாதிக்க பட்ட படியால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் கற்பகபுரம் கிராமத்துக்கு கட்டி கொடுக்கபட்ட மண்டபத்தில் தங்கவைக்க பட்டுள்ளதாக கிராம மகளிர் சங்க தலைவியும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்ட கற்பகபுரம் கிராம வளவாளருமான திருமதி ராஜேஸ்வரி தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவரான சந்திரகுமார் (கண்ணன்) இடம் தெரிவித்தது மட்டுமின்றி இரவு அவர்களுக்கு பாணும், பருப்பும் உணவாக வழங்கினர்.

அவர் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க 24.09.2014 இன்று காலை தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன் ), மாணிக்கம் ஜெகன் ஆகியோர் 10 பேருக்குமான காலை சாப்பாடையும் .சிறுவர்களுக்கான பிஸ்கட்டையும் நேரடியாக சென்று வழங்கி இருந்தனர் .

அதில் கருத்து தெரிவித்த பழைய கற்பகபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சண்முகம் அவர்கள் 2009இல் 16 தகரங்களுடன் வீடு போட்டு குடியேறுமாறு நாம் மீள் குடியேற்றபட்டதாகவும்,6 மாதங்களில்வீட்டு திட்டம் வரும் என தம்மை குடியேற்றிய அதிகாரிகள் சொன்னதாகவும் சுமார் 6 வருடங்கள் கழிந்து விட்டதாகவும் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக போட்ட குடிசைகளில் தாம் வாழ்ந்ததாகவும், அது உறுதி இல்லாததும் இந்த அனர்த்தத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தகரம் பறந்தும், மண் வீடுகள் இடிந்தும் விழுந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இது சம்மந்தமாக புதிய கற்பகபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் விஜயகுமார் தெரிவித்த போது சுமார் 17 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் ,மேலும் பல பயன் தருநிலையில் உள்ள வாழைமரங்களும் முறிந்து விழுந்துள்ளதாகவும் கவலையுடன் தெரிவித்த இவர், இரவு கிராம சேவையாளர் திரு தர்சன் வந்து அனர்த்தங்களை பார்வையிட்டதாகவும் குறிப்பிட்டார் .

வீடு, வாழ்வாதாரம் அற்ற நிலையில் உள்ள இம் மக்களுக்கு உலர் உணவுகள் மட்டும் அன்றி இரு நாட்களுக்கு ஏனும் சமைத்த உணவை 3 நேரங்களும் வழங்க உதவும் மனம் கொண்ட சமுக ஆர்வலர்கள் ,வர்த்தகர்கள் , பொது அமைப்புகள் முன் வரவேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

DSCN1718 DSCN1721 DSCN1722 DSCN1725 DSCN1726 DSCN1739 DSCN1744 DSCN1748 DSCN1753