கொங்கோ காடுகளில் கண்டறியப்பட்ட புதிய குரங்கு இனம்!!

17

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசின் லோமாமி தேசிய பூங்காவில், செம்மஞ்சள் நிற உதடுகளையும் கருப்பு முகத்தையும் கொண்ட முற்றிலும் புதிய குரங்கு இனம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உள்ளூர் மக்களால் ‘லிக்வேலி’ என்று அழைக்கப்படும் இந்த இனம், அடர்ந்த காடுகளில் மரங்களின் உச்சியில் வசிக்கும் ஒரு இரகசிய வகை உயிரினமாகும்.

ஆபிரிக்காவில் கடந்த 75 ஆண்டுகளில் கண்டறியப்பட்ட ஐந்தாவது புதிய குரங்கு இனமாகும். அத்துடன், இதன் தனித்துவமான குரல் மற்றும் மரபணு சோதனைகள் மூலம் இது புதிய இனம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.