வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரிக்கு முன்பாக தற்காலிக மீன் சந்தை அமைப்பதற்கு பாடசாலை சமூகம் கடும் எதிர்ப்பு!!

727

Sivaprakasa

வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரிக்கு முன்பாக நகர சபை செயலாளர் மீன் சந்தை அமைப்பதற்கு இடம் கொடுத்தமைக்கு பாடசாலை சமூகம், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள மீன் சந்தை கட்டிடம் திருத்தபடவுள்ளதால் அதற்கு பதிலீடாக பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான காணியில் மீன் சந்தை அமைப்பதற்கான வேலைகள் இடம் பெற்று வருகின்றன.

சைவத் தமிழ் பாடசாலையாக விளங்குகின்ற இக்கல்லூரிக்கு முன்பாக மீன் சந்தை அமைப்பது சைவமக்களை அவமதிக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மாற்றீடாக பல இடங்கள் உள்ள போது இவ்விடத்தில் மீன் சந்தை அமைப்பதற்கு நகர சபை செயலாளர் இடம் கொடுத்தமைக்கு பாடசாலை சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதேவேளை பாடசாலை அதிபர் உமா இராசையா அவர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களை சந்தித்து மீன் சந்தை அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு கேட்கவுள்ளதாக தெரிவித்தார்.

.