யாழில் 19 வயது யுவதியின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன?

105

யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் 19 வயதான யுவதி ஒருவர் விபரீத முடியவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உரும்பிராய் வடக்கு கற்பகப் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த யுவதியே நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. எனினும் யுவதியின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.

இந் நிலையில் இளம் யுவதியின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.