தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் : இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

12

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22.07.2026) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று அதன் விலை 3000 ரூபாவால் அதிகரித்து 380,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,500 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,700 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.