கோர விபத்தில் இருவர் பலி : ஆபத்தான நிலையில் மூன்று மாணவர்கள்!!

13

புதிய இணைப்பு : நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப்பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சிக்கு அருகே பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நாவலப்பிட்டி/டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று மாணவர்களும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த போது முச்சக்கர வண்டியில் 5 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் பயணித்த முதியவர் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

அதிவேகமாக சென்ற முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக நல்லதன்னி பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு : நல்லத்தண்ணியில் இருந்து மஸ்கெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோகினி எல்லயிலிருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வாகனம் வீதியிலிருந்து விலகிச் சென்று பள்ளத்தில் விழுந்து இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் இரு முதியவர்களும் சிறுவர்களும் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இரண்டு சிறுவர்களும் தற்போது கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.