வவுனியா வெங்கலசெட்டிகுளம் பிரதேசசபையின் புதிய செயலாளராக திருமதி கலைச்செல்வி ரொபின்சன்!!

270

வவுனியா வெங்கலசெட்டிக்குளம் பிரதேச சபையின் புதிய செயலாளராக திருமதி கலைச்செல்வி றொபின்சன் கடந்த திங்கட்கிழமை (20.07.2026) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த காலங்களில் பிரதேச சபையின் உள்ளக கணக்காய்வாளராகவும் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) பணியாற்றிய இவர், தனது அர்ப்பணிப்பான மற்றும் நேர்மையான சேவையின் மூலம் அனைவரது மதிப்பையும் பெற்றவர்.

சிறப்பான சேவையை வழங்கிய அனுபவம் மிக்க ஒருவர், மீண்டும் அதே நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இணைந்துள்ளமை பிரதேச சபை ஊழியர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் பெருமையையும் மிகுந்த மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

அவரது பரந்த அனுபவம், திறமை மற்றும் அர்ப்பணிப்பான சேவை என்பன பிரதேச சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பொறுப்பை ஏற்றுள்ள அவருக்கு நிர்வாகத்தினரும் ஊழியர்களும் தமது இதயபூர்வமான வாழ்த்துகளையும் நல்வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.