வவுனியா வடக்கு பிரதேச கலை இலக்கிய பெருவிழா!!

763

வவுனியா வடக்கு பிரதேச செயலக கலை இலக்கிய பெருவிழா இன்று (25.09) காலை நெடுங்கேணி கந்தசாமி ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

வவுனியா வடக்கு கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் வவுனியா வடக்கு பிரதேச செயலகர் க.பரந்தாமன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வு காலை 9 மணிக்கு நெடுங்கேணி மாகாவித்தியாலய முன்றலில் இருந்து பண்பாட்டு பேரணியுடன் ஆரம்பமாகியிருந்தது.

இதன் போது தமிழர்களின் பாரம்பரிய கலைகள், பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், வேடன் ஆட்டம், காவடி, கோலாட்டம் என்பவற்றுடன் தமிழ் வீரர்கள் மற்றும் பெரியார்களின் உருவப்படங்கள் தாங்கிய ஊர்தியும் பண்பாட்டு பேரணியில் அடங்கியிருந்தது.

இதனையடுத்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கலை பண்பாட்டலுவல்கள் கல்வி அமைச்சின் பிரதி பணிப்பாளர் திருமதி உசா சுபலிங்கம் கலந்து கொண்டிருந்ததுடன் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.மதிதரன், வவுனியா வடக்கு கல்வி பணிப்பாளர் திருமதி க.பராசக்தி, வவுனியா தமிழ்ச் சங்க செயலாளர் தமிழருவி த.சிவகுமாரன், வவுனியா வடக்கு பிரதேச சபை செயலளார் க.பிரபாகரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

1112