வவுனியா விபுலானந்தா கல்லூரி அதிபரின் வீட்டில் திருடிய யுவதி பிடிபட்டார்!!

824

A1

வவுனியா, பண்டாரிக்குளம், விபுலானந்தா கல்லூரி அதிபரின் வீட்டில் இருந்த மடிக்கனணி மற்றும் நவீன கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்ட யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அதிபரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து தொலைபேசி நிலையத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குறித்த தொலைபேசி இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர் கைதாகியுள்ளார். இவர் அதிபரின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர் எனவும் அவர் வீட்டில் இல்லாத நேரம் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபர் இன்று வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.