இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு வெண்கலப் பதக்கம்!!

609

SL

17வது ஆசிய போட்டிகளில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற சீன மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்தமானித்தது.

இதன்படி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்த சீனா 65 ஓட்டங்களை விளாசியது. இதனையடுத்து பதிலளித்தாடிய இலங்கை 17.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 66 ஓட்டங்களைக் குவித்தது.

இதன்படி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணி வெற்றியைத் தனதாக்கி வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியுள்ளது.

மேலும் இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை சுவீகரிக்கப் போகும் அணியைத் தெரிவு செய்யும் போட்டி இன்று பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.