இலங்கையை உலுக்கிய பெரும் சோகம் : உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

138

இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

ஹற்றன், கினிகத்தென – பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்திட்டு சரிந்து வீழ்ந்ததில் அதில் புதையுண்டு நான்கு பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் மாத்தளையில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் என்றும், ஏனைய இருவரும் வீட்டில் வசித்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நான்கு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாய் குசும் ரத்நாயக்க, மூத்த சகோதரி ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, இளைய சகோதரி மனேல் குமுதுனி ரத்நாயக்க, மகன் மஹின்ச தினேத் ரத்நாயக்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மலையகத்தில் ஏற்பட்ட திடீர் மழை காரணமாக பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் காரணமாக சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்காலிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.