“அகதி நாய்” தமிழக பொலிசாரின் தகாத வார்த்தையால் இலங்கை ஏதிலி உயிரிழப்பு!!

13

தமிழகம் – புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இலங்கை தமிழ் ஏதிலி அண்மையில் சிறை சென்று அண்மையில் விடுதலையானவர் என்றும் அவர் தினமும் பொலிஸ் நிலையம் சென்று கையொப்பம் இட்டு வருபவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் ஒரு நாள் பொலிஸ் நிலையம் செல்லாத நிலையில் பின்பு கையெழுத்து இட சென்றபோது அங்கிருந்த பொலிஸார் , அகதி நாய் என கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகின்றது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தமிழ் ஏதிலி, வீட்டுக்கு செல்லாது எலிமருந்தை குடித்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. அவரது உயிரிழப்பை அடுத்து , புழல் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார், இளம் பெண்கள், மற்றும் ஆண்கள் என சுமார் 100 பேரை கைது செய்ததாக கூறப்படுகின்றது. அதோடு முகாமை விட்டு மக்கள் வெளியேறாத வகையில் தடுத்ட்க்ஹதுடன், வெளியாட்கள் யாரும் முகாம் உள்ளே செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.