
நாட்டில் நடப்பாண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று (03) நிலவரப்படி, டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 86,947 ஆக உயர்ந்துள்ளதாக அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 1,598 புதிய டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 21.24 சதவீத டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 17,187 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,082 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை நாடு முழுவதும் 62 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், மரண விகிதம் 0.07 சதவீதமாக இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.





