இரு பிள்ளைகளை நடுத் தெருவில் விட்டுச் சென்ற தந்தை!!

796

Shadow

கம்பஹா மாவட்டம் நிட்டம்புவ பொலிஸ் பிரிவின் பஸ்யாலை நகரில் தந்தை ஒருவர் வீதியில் கைவிட்டு சென்ற இரண்டு ஆண் பிள்ளைகளை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

பஸ்யாலை பிரதேசத்தில் இன்று காலை 8 மணியளவில் 7 மற்றும் 9 வயதான இரண்டு ஆண் பிள்ளைகள் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தம்மை தமது தந்தையே இவ்வாறு நடுத் தெருவில் விட்டுச் சென்றதாக பிள்ளைகள் கூறியுள்ளனர்.