பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞன் : ஆறு மில்லியன் ரூபா பண மோசடி!!

30

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து 6,365,000 ரூபாவை மோசடி செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினரால் 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், பங்கதெனிய சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரை இணையவழி வங்கிச் சேவைகள் ஊடாகப் பணத்தை மாற்றியனுப்புமாறு சந்தேக நபர் நம்ப வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்த முறைப்பாடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பெறப்பட்டது.

அத்துடன், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் அம்பிளாந்துறையை சேர்ந்தவர் என அதிகாரிகள் அடையாளம் கண்டனர். சந்தேக நபர் கடந்த 3 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரின் தகவலுக்கமைய, இச்சம்பவத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து மோசடியாகப் பெறப்பட்ட மொத்தத் தொகை 6,644,000 ரூபாவாகும். சந்தேக நபர் இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.