மனைவியின் உயிரை பறித்த கணவன் : குடும்பத் தகறாரால் வந்த விபரீதம்!!

82

கணவனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வெளகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகொட்ட பகுதியில் நேற்று (06) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த பெண் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பகொட்ட பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏற்பட்ட குடும்பத் தகராறு எல்லை மீறிச் சென்றதையடுத்து, கணவன் கூர்மையான ஆயுதத்தால் மனைவியைத் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 50 வயதுடைய கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெளகெதர பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.