உடல் எடையை குறைக்க அரசிடம் கெஞ்சும் குண்டு பெண்!!

1739

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது உடல் எடையை குறைக்க அரசை உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் வீகான் பகுதியில் கிறிஸ்டினா பிரிக்ஸ் (26) என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சுமார் 153 கிலோ எடை கொண்ட இவர், தனது உடல் பருமனால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்.

இதற்கு காரணம் தான் அதிக கொழுப்பு நிறைந்த உணவினை உட்கொண்டதே ஆகும் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிக உடல் எடையால் இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர்.

ஆனால் உடலை குறைப்பதற்காக உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லவும், நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கும் இவரிடம் பணம் இல்லை.

எனவே தனது உடலை குறைப்பதற்கு அரசு பணம் கொடுத்து உதவ வேண்டும் என அந்நாட்டின் அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.

இதற்கிடையே இவருக்கு உதவி செய்ய பிரித்தானியாவின் பிரபல கட்டுரையாளர் கேட் ஹாப்கின்ஸ் (39) முன்வந்துள்ளார் என கூறப்படுகிறது.

F F1 F2