புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் 29ஆம் திகதி வெளிவருகின்றது!!

830

grade-5-exam-results

ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளை எதிர்வரும் திங்கள் கிழமை 29ஆம் திகதி வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டுக்கான் ஐந்தாம் தரப் புலைமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிட்டதனால் மாணவர்கள் எதிர்நோக்கிய சிரமத்தைக் கருத்திற்கொண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் இப்பரீட்சை முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோனைக்கமைய திங்கள் கிழமை இப்பரீட்சை முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆத்துடன் இப்பரீட்சை முடிவுகளை http://www.doenets.lk என்ற திணைக்களத்தின் இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் என அவ்வதிகாரி மேலும் குறிப்பிட்டார்.