ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன்!!

28

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் தொடர்பில் வியக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கொடுவா மீன்களே இவ்வாறு ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் தன்மையை கொண்டுள்ளதாம்.

மீன் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இனப்பெருக்க முறையைக் கொண்ட கொடுவா மீன்கள் என அழைக்கப்படும் ‘பாராமுண்டி’ (Barramundi) மீன்களின் அதிசயம் குறித்து அறிவோம். பாராமுண்டி மீன்கள் ஆரம்பகால வாழ்க்கையில் ஆண்களாகவே காணப்படுகின்றன.

பொதுவாக இவை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. உடல் வளர்ச்சி மற்றும் வயது அதிகரிக்கும் நிலையில், இவற்றில் சில மீன்கள் இயற்கையாகவே பெண் மீன்களாக மாறுகின்றன.

இந்த பாலின மாற்ற நிகழ்வு அறிவியல் ரீதியாக “புரோட்டாண்ட்ரி” (Protandry) என அழைக்கப்படுகிறது. இவ்வாறு பெண்ணாக மாறும் பெரிய அளவிலான பாராமுண்டி மீன்கள், இனப்பெருக்க காலத்தில் மில்லியன் கணக்கான முட்டைகளை இடும் திறன் கொண்டவை.

சில சமயங்களில் ஒரு மீன் 3 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இடக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம் , அனைத்து ஆண் பாராமுண்டி மீன்களும் பெண் மீன்களாக மாறுவதில்லை. அவற்றில் சில வாழ்நாள் முழுவதும் ஆண் மீன்களாகவே வாழும் என்று ம் கூறப்படுகின்றது.