சென்னை நகரின் 375வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மீண்டும் வித்தியாசமான சவால் ஒன்றை செய்துள்ளனர்.
கடந்த வாரம் காபி சலஞ்ச் என்ற சவாலை செய்த அணி தற்போது குத்து சலஞ்ச் என்னும் சவாலை செய்துள்ளது. அதாவது லுங்கியை அணிந்து கொண்டு செம குத்தாட்டம் போட வேண்டும்.
ஈஸ்வர் பாண்டே, பிரண்டன் மெக்கல்லம், ஆஷிஷ் நெஹ்ரா, மோஹித் சர்மா, வேயன் பிராவோ மற்றும் டுபிளெஸிஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டு கலக்கி எடுத்தனர்.






