அதிகாலை நேர்ந்த கோர விபத்தில் தாயும் மகனும் பலி : ஆபத்தான நிலையில் குழந்தை!!

216

தம்புள்ள – மஹியங்கனை பிரதான வீதியில், தமனயாய பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை (11) நிகழ்ந்த இந்த விபத்தில் 63 வயதான தாயும், அவரது 43 வயதான மகனும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் ஒன்றரை வயது மகனும் படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருந்து கொழும்பிலிருந்து கல்முனைக்கு சென்றுகொண்டிருந்த போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் தமனயாய பகுதியில் திரும்பமுற்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.