ஐஃபோன் பயனர்களுக்கு வட்ஸ்அப் கணக்கினால் ஆபத்து : விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

37

ஐபோன் பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய இணையவழித் தாக்குதல் குறித்து இலங்கை கணினி அவசர உதவிப் பிரிவு (Sri Lanka CERT) அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை படி, ‘ஜீரோ-கிளிக்’ என்று அழைக்கப்படும் இந்த தாக்குதல், iOS 16 மொபைல் இயங்குதளத்தில் இயங்கும் ஐபோன்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைப் பயன்படுத்தி இணையவழித் தாக்குதலை மேற்கொள்கின்றது.

இந்த தாக்குதல் தொடர்பில் பல பயனர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும், ‘ஜீரோ-கிளிக்’ வாட்ஸ்அப் பாதுகாப்பு மீறல் தற்போது இலங்கையில் உள்ள பயனர்களிடையே பரவி வருவதாகவும் SLCERT வலியுறுத்தியுள்ளது.

‘ஜீரோ-கிளிக்’ தாக்குதலானது, ஒருமுறை கடவுச்சொல் (OTP) அல்லது பாதுகாப்பு இணைப்பு போன்ற பாதுகாப்பு சரிபார்ப்பு நடவடிக்கைகள் தேவையின்றி, பயனர்களை நேரடியாகக் குறிவைக்க முடியும் என கூறப்படுகிறது.

பயனர்கள் தங்கள் சாதனங்களையும் மென்பொருள்களையும் சமீபத்திய பாதுகாப்புப் புதுப்பிப்புகளுடன் புதுப்பித்துக்கொள்ளவும், தங்கள் வாட்ஸ்அப் கணக்குகளில் இரு-படி சரிபார்ப்பு இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.