IDM Nations Campus International வவுனியா வளாக மாணவர்களின் வரலாற்றுச் சாதனை!!

266

வவுனியாவில் இயங்கி வரும் IDM Nations Campus International – வட கிழக்கு பிராந்திய வளாகத்தில் சட்டக் கல்வியைப் பயின்ற மாணவர்கள், இலங்கை சட்டக் கல்லூரியின் (Sri Lanka Law College) இறுதியாண்டு பரீட்சையில் சிறப்புச் சித்திகளைப் பெற்று, சட்டத்தரணிகளாக (Attorney-at-Law) உருவெடுக்கும் பாதையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

UK நாட்டின் Buckinghamshire New University வழங்கும் LLB (Hons) பட்டப்படிப்பை நிறைவு செய்து, இத்தேர்வில் வெற்றி பெற்ற 10 மாணவர்களில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் அடங்குவர் என்பது வவுனியா மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

வவுனியா மையத்தின் வழிகாட்டலில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மாவட்ட ரீதியிலான பட்டியல்:

வவுனியா மாவட்டம் (5 மாணவர்கள்)
* ஜே. இவோன் ஷரோமி
* ஜுனைதீன் முகம்மது ஹிஜாஸ்
* முகம்மது ஷரீஃப் முகம்மது அலி
* பி. தியாகரன்
* எஸ். வித்தியா

யாழ்ப்பாணம் மாவட்டம் (3 மாணவர்கள்)
* அன்டன் வில்வராசசிங்கம் அஜந்தன்
* ரோஷானி சுந்தர்
* ஜனனி செந்தில்நாதராஜா

மன்னார் மாவட்டம் (2 மாணவர்கள்)
* ரொபர்ட் புரூஸ் கிங்ஸ்லி ஜெயராஜ்
* கௌசல்யா ஜெயக்குமார்

வடகிழக்கு பிராந்தியத்தின் கல்வி மையமாகத் திகழும் வவுனியா IDM வளாகம், மாணவர்களுக்குத் தேவையான உயர்தர கல்வி வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் நவீன வசதிகளை வழங்கி இம்மாபெரும் சாதனைக்கு உறுதுணையாக நின்றுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய (IDM Nations Campus International North & East Regional Campus Vavuniya) இயக்குநர் கலாநிதி அண்ட்ரூ அனஸ்லி அவர்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவத்தின் கீழ், வவுனியாவை தலைமை இடமாகக் கொண்டு வடக்கு மாகாண மாணவர்கள் சட்டத் துறையில் தடம்பதித்து வருகின்றனர்.

இலங்கை சட்டக் கல்லூரிக்குத் தெரிவாகியுள்ள வவுனியா உட்பட பிற மாவட்டங்களைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கும், அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த சட்ட வல்லுநர்களாக உருவெடுத்து நீதியை நிலைநாட்டவும் IDM Nations Campus International வவுனியா வளாகம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

“IDM Nations Campus International இல் கல்வி – சட்டத் துறையில் வெற்றிக்கான உறுதியான அடித்தளம்.”

-இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்-