வெளிநாட்டில் கணவன் : இலங்கையில் இளம் மனைவியின் மோசமான செயலால் ஏற்பட்டுள்ள விபரீதம்!!

236

இணைய வழிக் கணினி விளையாட்டுகள் மூலம் அறிமுகமான பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹாவின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திக்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, இளம் மனைவி இணைய விளையாட்டுகள் ஊடாக அறிமுகமான சந்தேகநபருடன் முறையற்ற காதலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், அந்த இளைஞருடன் அவர் பயணங்கள் மேற்கொண்ட போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் தனது கணவர் மீண்டும் இலங்கை திரும்புவார் என்ற தகவலைத் தொடர்ந்து, குறித்த பெண் காதலை கைவிட்டுள்ளார்.

அதனால் கோபமடைந்த சந்தேகநபர் இவ்வாறு பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு புகைப்படங்களை சமூக வலைத்தளத்திற்கு அனுப்புவதற்கு முன்னர், தன்னுடன் மீண்டும் இணையாவிட்டால் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.

அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளை விடுத்ததுடன், தேவையான சந்தர்ப்பங்களில் அவரை அழைத்துச்சென்றுள்ளார். இளைஞனின் அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் குறித்த பெண் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.

இதன் காரணமாக பழி வாங்கும் நோக்கில் சந்தேகநபர் பெண்ணின் புகைப்படத்துடன் “காதலி காணாமல்போயுள்ளார் கண்டுபிடித்து தாருங்கள்” என சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், கணவருக்கும் வட்ஸ்அப் குறுஞ்செய்திகள் ஊடாக மனைவியின் தகாத புகைப்படங்களை அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.

தனது தகாத புகைப்படங்கள் சமூக வலைத்தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் திக்வெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

அதற்கமைய பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள், சந்தேகநபரை முன்தினம் கைது செய்துள்ளனர்.