
சென்னை அம்பத்தூர் பகுதியில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவரே மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த வைதேகி என்பவருக்குச் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மனைவி இன்ஸ்டாகிராமில் பிற ஆண்களுடன் பழகுவது குறித்துக் கணவர் சின்னா என்பவருக்குக் கடுமையான ஆத்திரமும் சந்தேகமும் இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று வைதேகியை ஏமாற்றி வெளியே அழைத்துச் சென்ற சின்னா, ஓடும் ஆட்டோவில் வைத்துத் தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்ததாகத் தெரிகிறது.
பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இக்கொடூரச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய கணவர் சின்னாவைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





