தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!!

171

தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் , போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை செவ்வாய்க்கிழமை கரம்பிடித்தார்.

போர்ச்சுகல் மற்றும் அல் நஸ்ர் அணியின் நட்சத்திர வீரரான 41 வயதான ரொனால்டோவும், 32 வயதான ஸ்பெயின் மாடல் ரோட்ரிக்ஸும் கடந்த பத்தாண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அலானா மார்டினா மற்றும் பெல்லா எஸ்மெரால்டா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 2017 ஆம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு கூச்சி பேக் விற்பனையகத்தில் விற்பனையாளரான ஜார்ஜினாவை முதல்முறையாகச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்தனர். இதற்கிடையில், 2017 ஆம் ஆண்டு நவம்பரில், ஜார்ஜினா மகள் அலானா மார்டினாவைப் பெற்றெடுத்தார்.

அதற்கு முன், ரொனால்டோவுக்கு வாடகைத் தாய் மூலம் ரொனால்டோ ஜூனியர் மற்றும் மேட்டியோ, ஈவா மரியா என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஐந்து குழந்தைகளையும் ஜார்ஜினா மற்றும் ரொனால்டோ இருவரும் வளர்த்து வருகின்றனர்.

நீண்டகாலமாகவே இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், இருவரும் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்கு அருகிலுள்ள மேற்கு போர்ச்சுகலின் கடலோர நகரான கஸ்காய்ஸில் நேற்று (12) தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.