திருமணத்தின் பின்னர் நடந்த விபரீதம் : மணமகளின் சகோதரனும் பாட்டியும் கோர விபத்தில் பலி!!

27

கம்பஹா – வெயங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்கம்பத்தில் வானொன்று மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துளள்னர்.

நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வானின் சாரதியான 21 வயதான நவோத் சதுரங்க, அவரது பாட்டியான 80 வயது மூதாட்டி டபிள்யூ.ஏ. விக்கிரமாராச்சி ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் தனது மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று வெயங்கொடை ஹீந்தெனியா பகுதியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மணப்பெண்ணின் சகோதரர் வானை செலுத்திச்சென்ற நிலையில், மணப்பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் தந்தை உட்பட 9 பேர் அந்த வானில் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், வானில் பயணித்த ஏனைய 7 பேர் காயமடைந்து கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சாரதி வாகனம் செலுத்தும்போது உறங்கிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.