கையடக்க தொலைபேசிக்காக மாணவியின் விபரீத முடிவு!!

34

பதுளை, மஹியங்கனை வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகஹஎல பிரதேசத்திலிருந்து கையடக்கதொலைபேசியைக் கொடுக்கவில்லை என்ற மனவேதனை காரணமாக 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் தோற்றவிருந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாணவியின் மரண விசாரணையை யட்டிநுவர திடீர் மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன மேற்கொண்டுள்ளார்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பியதும் மகள் எப்போதும் கையடக்கதொலைபேசியுடனேயே பொழுதை கழிப்பதாக சாட்சியமளித்த உயிரிழந்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதால் மாணவி அது தொடர்பில் அடிக்கடி புத்திமதி கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று மகள் கையடக்கதொலைபேசியை பயன்படுத்திக் கொண்டிருந்த போது மாணவி அதனைப் பறித்த நிலையில் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்குச் சென்றுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் மகள் அறையில் தூக்கிட்டுக் கொண்டதாகவும் அவர் மேலும் சாட்சியமளித்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி கல்வி நடவடிக்கைகளில் மிகவும் திறமையானவர் என்றும், அவர் பரீட்சைகளின் போது எப்போதும் வகுப்பில் முதலாம் அல்லது இரண்டாம் இடங்களை பெற்றுவந்துள்ளாரென்றும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.  சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.