
மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் கடந்த மாதம் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
27 வயதான , மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் 7 Hours to Go, The Final Exit, Ghost உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இந்தி மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி, பல்வேறு இசை வீடியோக்களிலும் அனன்யா ராஜ் நடித்துள்ளார். தெலுங்கில் Thaggede Le படத்திலும், Madrasi Gang என்ற மும்மொழி படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், அனன்யா ராஜ் காலமானதாக அவரது குடும்பத்தினர் நேற்று (16) அறிவித்துள்ளனர். அனன்யா ராஜ், கடந்த ஜூலை 15-ம் தேதி உயிரிழந்ததாக தற்போது அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அவரது மரணச் செய்தி உடனடியாக வெளியிடப்படவில்லை. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 16-ம் தேதி குடும்பத்தினர் அவரது சமூக வலைதள பக்கத்தின் மூலம் மரணத்தை அறிவித்துள்ளனர்.
அனன்யா ராஜ்-இன் மறைவு செய்தி அவரது ரசிகர்கள், திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





