
தற்போது வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக அடுத்த ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல்மயமாக்கல் செயல்முறையின் கீழ், இந்த ஆண்டின் அடுத்த சில மாதங்களில் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டிற்குள் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள 17 மில்லியன் மக்களையும் , அடுத்த 2 ஆண்டுக்குள் பழைய அடையாள அட்டைக்கு பதிலாக டிஜிட்டல் முறைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





