மிரட்டும் திசர பெரேராவை புகழ்ந்து தள்ளும் பெய்லி!!

466

Perera

சம்பியன் லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இலங்கையின் திசர பெரேரா தரமான வீரராக இருக்கிறார் என்று அணித்தலைவர் பெய்லி கூறியுள்ளார்.

இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று நோதன் அணியுடன் மோதவுள்ளது.

இந்நிலையில் திசர பெரேரா பற்றி அணித்தலைவர் பெய்லி கூறுகையில், பந்து வீச்சு, துடுப்பாட்டம் என கலக்குவதில் தரமான வீரராக பெரேரா இருக்கிறார்.

பஞ்சாப் அணியில் மட்டுமல்லாது இலங்கை அணியிலும் அசத்துகிறார். கடந்த ஆறு மாதங்களாக இவரது செயல்பாடு சிறந்த நிலையில் உள்ளது எனக் கூறியுள்ளார்.