வவுனியா, கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் சிவனொளி பாதமலைக்கு சென்ற வாகனம் விபத்து!!

244

ஸ்ரீ பாத யாத்திரைக்காக வந்திருந்த ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற கார், நல்லதண்ணி-மஸ்கெலியா பிரதான சாலையிலிருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் குழுவினர் நேற்று (19) இரவு சுமார் 11 மணியளவில் நல்லதண்ணி பொலிஸாரை அணுகி, தாங்கள் ஸ்ரீ பாத யாத்திரை செல்ல விரும்புவதாகத் தெரிவித்தனர்.

அங்குள்ள பொலிஸ் அதிகாரிகள், நிலவும் மோசமான வானிலை காரணமாக இரவில் பயணம் செய்வது உகந்ததல்ல என்றும், அதற்காக இன்று காலை வருமாறும் அந்தக் குழுவினரிடம் கூறினர்.

பின்னர், அந்தக் குழுவினர் குளிப்பதற்காக காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​(19) நள்ளிரவு சுமார் 12 மணியளவில், மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் கார் சாலையிலிருந்து விலகிச் சென்றதில் விபத்து ஏற்பட்டதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்தபோது காரில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் இருந்தனர். விபத்தில் அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றாலும், கார் பலத்த சேதமடைந்தது. நல்லத்தண்ணி பொலிசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.