நாட்டில் வேகமாக பரவும் டெங்கு : அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!!

34

நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 93,115 ஆக உயிர்ந்துள்ளது.

இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 19 நாட்களில் நாட்டில் 7,777 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகளைப் பதிவுசெய்யும் மாவட்டங்களில் கம்பஹா மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 19,825 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டில் கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களில் முறையே 18,475 மற்றும் 6,725 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதால், மக்கள் சற்று அவதானது்துடன் செயற்படுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.