நடிகை ரோஜாவின் மீது வழக்குப்பதிவு!!

1227

Roja

கோயில் திருவிழாவில் தகராறு செய்தது தொடர்பாக நகரி எம்எல்ஏ நடிகை ரோஜா மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
இதில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா கலந்து கொண்டு அம்மனுக்கு முதல் ஆரத்தி எடுக்க முயன்றார்.

அப்போது அவரை தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் ஆரத்தி எடுக்கவிடாமல் தடுத்த போது ரோஜாவின் கையில் காயம் ஏற்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து, தான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றது பிடிக்காமல் தெலுங்கு தேசம் கட்சியினர் தன்னை பழிவாங்குவதாக கூறி கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் ரோஜா.

இதனிடையில் நகரியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி ரமேஷ், கோயில் திருவிழாவின் போது எம்எல்ஏ ரோஜா உட்பட 13 வய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தன்னை இழிவுபடுத்தும் வகையிலும், சாதி பெயரை கூறி தன்னை அவமதித்ததாக கூறி நகரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் கொடுத்த புகாரின்பேரில் எம்எல்ஏ ரோஜா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.