நாளை வேண்டிய வரங்கள் கிடைக்கும் வரலட்சுமி விரதம் : பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதம்!!

87

2026ம் ஆண்டில் ஆகஸ்ட் 21ம் தேதி அதாவது நாளையதினம் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பெண்கள், அன்னை மகாலட்சுமியிடம் இருந்து வேண்டிய வரங்களை கேட்டு பெறும் அற்புதமான நாளாக வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

பொதுவாக வரலட்சுமி விரதம் என்பது ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையிலோ அல்லது அதற்கு அடுத்து வரும் ஆவணி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையிலோ அல்லது பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையிலோ கடைபிடிக்க வேண்டிய விரதமாகும்.

பக்தர்கள் வேண்டும் வரங்களை தரும் லட்சுமியின் வடிவமான வரலட்சுமியை வழிபடும் நாளாகும். செல்வ வளம், ஆரோக்கியம், குழந்தைப்பேறு, திருமணம் ஆகியவை தொடர்பான வரங்களையும்,

மகாலட்சுமியின் அருளையும் பெறுவதற்காக வழிபடும் நாளாகும். கோவில்களிலும், வீடுகளிலும் வரலட்சுமி விரதம் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

கலசம் அமைத்து, அதை அம்மனை போல் அலங்கரித்து, பூஜைகள் செய்து வழிபடுவது பக்தர்களின் வழக்கம்.

திருமணமான பெண்கள் தங்களின் கணவர் நீண்ட ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகவும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்வது வழக்கம்