
உடலநலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சௌகார் ஜானகி தனது 94ஆவது வயதில் காலமானார்.
தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவரான சௌகார் ஜானகி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று (21.08.2026) மதியம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 1950 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ’சவுகாரு’ திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதை தொடர்ந்து சௌகார் ஜானகி என அவர் அழைக்கப்பட்டார்.
சௌகார் ஜானகியின் மறைவு தென்னிந்திய திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





